small gov

தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின், அளவுகள் அலகு (MUSSD) அளவு அலுகுகளை அமுலாக்குவதற்காக, 1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தரங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் 1997ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த திணைக்களம் 1946ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க நிறுத்தல் மற்றும் அளத்தல் கட்டளைச் சட்டத்தை அமுலாக்குவதற்கு 1952ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு வர்த்தக திணைக்களத்தின் நிறுத்தல் மற்றும் அளத்தல் பிரிவின் மூதாதையாகத் திகழ்கிறது. தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின், அளவுகள் அலகு இலங்கையின் விஞ்ஞான ரீதியான, கைத்தொழில் மற்றும் சட்ட ரீதியான அளவுகளுக்கு பொறுப்பாக இருக்கும் தேசிய அளவுகள் நிறுவனமாகும்.

எமது நோக்கு

"நன்றாகப் பாதுகாக்கப்பட்ட வாடிக்கையாளர் சமூகத்திற்காக மிகச்சரியான மற்றும் நம்பத்தகுந்த அளவுகள்"

எமது செயற்பணி

"இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தரங்களையும் மேம்படுத்துவதற்கு அளவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்ஞமுறைப்படுத்தல் மற்றும் சேவைகள் என்பவற்றின் ஊடாக உற்பத்தியாளர்களுக்கு, வர்த்தகர்களுக்கு, எடையளவுகள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குகின்றவர்களுக்கு, நுகர்வோருக்கு நீதியையும் நியாயத்தையும் உறுதிப்படுத்தி, சர்வதேச தரங்களுடன் இணங்கியொழுகி தேசிய அளவு தரங்களை பரப்புதல், பராமரித்தல் மற்றும் ஸ்தாபித்தல்"

தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின், அளவுகள் அலகின் (MUSSD) வகிபாகம்

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தரங்களையும் மேம்படுத்துவதற்கு அளவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் சேவைகள் என்பவற்றின் ஊடாக உற்பத்தியாளர்களுக்கு, வர்த்தகர்களுக்கு, எடையளவுகள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குகின்றவர்களுக்கு, நுகர்வோருக்கு நீதியையும் நியாயத்தையும் உறுதிப்படுத்தி, சர்வதேச தரங்களுடன் இணங்கியொழுகி தேசிய அளவு தரங்களை பரப்புதல், பராமரித்தல் மற்றும் ஸ்தாபித்தல் தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின், அளவுகள் அலகின் செயற்பாடாகும்.

செயற்பாடுகள்

தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின், அளவுகள் அலகு (MUSSD) SI அலகுகளையும் அளவுகள் தரங்களையும் பேணும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. அத்துடன் அளவுகளின் தரம், சான்றாதார பொருட்கள் மற்றும் சான்றாதார உத்திகள் என்பவற்றைப் பேணுதல் மற்றும் விருத்தி செய்தல் என்பவற்றின் ஊடாக அவற்றின் அளவு அலகுகளை தீர்வு செய்தல்.

பிரதான செயற்பாடுகள்

  • இலங்கையின் தேசிய அளவுகள் முறைமையின் சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேவைப்படுபவைகளைப் பாதுகாப்பதற்கும் தேவைப்படுகின்ற விஞ்ஞான, சட்ட மற்றும் நிருவாக கட்டமைப்பை ஸ்தாபித்தல் மற்றும் பராமரித்தல்.
  • அளவு திருத்துவதற்கு/ பரிசோதிப்பதற்கு ஆய்வுகூட வசதிகளை வழங்குதல்.
  • கைத்தொழிலுக்கு பதிப்பாராய்தல் வசதிகளை வழங்குதல்.
  • இலங்கை தரப்படுத்தல் நேரத்தை வழங்குதல் மற்றும் பேணுதல்.
  • பணிப்பாணை சரிபார்த்தல் முறைமையால் வர்த்தகத்தில் பயன்படுத்துகின்ற, சூழலியல் பாதுகாப்பு, ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் போன்றவற்றின் சரியான தன்மையைப் பாதுகாத்தல்.
  • மாவட்ட அடிப்படையில் இயங்கும் தரங்கள், சரிபார்த்தல் நிலையங்கள், ஆய்வுகூடங்கள் என்பவற்றை ஸ்தாபித்தல்.
  • வர்த்தகத்தில் பயன்படுத்துகிற எடை, அளவுகள், அளக்கும் மற்றும் நிறுக்கும் உபகரணங்களின் முதனிலை சரிபார்த்தல் மற்றும் மறு-சரிபார்த்தல்.
  • வர்த்தகத்தில் பயன்படுத்துகிற அளக்கும் மற்றும் நிறுக்கும் உபகரணங்களைத் தயாரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் விற்பனை என்பவற்றை சட்டரீதியாக கட்டுப்படுத்துதல்.
  • வர்த்தகத்திலும் கைத்தொழிலிலும் பயன்படுத்துகிற எடைகள், அளவுகள், அளக்கும் மற்றும் நிறுக்கும் மாதிரி வடிவங்களை அங்கீகரித்தல்.
  • நாட்டின் அளவுகள் சட்டத்தை மீறுகின்ற ஆட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாத்தல். (1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க ஆருளுளு சட்டம்)
  • முற்கூட்டியே பொதி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களைப் பரிசோதித்தல்.
  • நுகர்வோர் கல்வி.