அளவு அலகுகள், அலகு பாகங்கள் மற்றும் பெரிய பாகங்களை ஸ்தாபித்தல், புதிய அளவு முறைமைகளைக் கண்டுபிடித்தல், அளவு தரங்கள் பற்றிய அறிவைப் பெறுதல் மற்றும் அத்தகைய தரங்களை செயற்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் உள்ள பயனர்கள் ஊடாக அத்தகைய நடவடிக்கைகளை ஊடுருவிப் பரப்புதல் என்பவை இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களாக இருக்கின்றன. இந்த முறைமையில் உள்ள பிழைகள் மற்றும் விடயங்களைக் கண்டுபிடித்ததன் மூலம் எழுந்த தாக்கங்கள் மற்றும் நடைபெறும் விடயங்கள் என்பவற்றை அறிந்து கொண்டதை அடுத்து இவை அனைத்தும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட அளவு தொகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான அளவுகளைப் பொறுப்பேற்பதற்காக பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கொள்கைகள் கீழே தரப்பட்டுள்ளன:
- தேசிய அளவு ஆய்வுகூடத்தை அமைத்தல் மற்றும் அதனூடாக நாட்டின் தேசிய அளவு முறைமைகளை ஸ்தாபித்தல்.
- தேசிய அளவு தரங்களை மீட்டல், ஸ்தாபித்தல், இற்றைப்படுத்தல், பராமரித்தல் மற்றும் பரப்புதல்.
- சர்வதேச தரங்களை உறுதிப்படுத்தி தேசிய அளவு தரங்களை ஸ்தாபித்தல் மற்றும் செயற்படுத்துதல்.
- செயற்பாடுகளின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அளவுகளையும் தொழில்நுட்ப தரங்களையும் பரப்புதல் மற்றும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்தல்.
- தேவைப்படும் எண்கள் இடும் முறைமை மற்றும் ஆராய்ச்சி ஆய்வுகூடத்தை தரப்படுத்துதல் என்பவற்றிற்காக தேசிய அளவு முறைமையை நிலையாக முன்னெடுத்தல்.
- விஞ்ஞான அளவுகள் தொழில்நுட்பம், ஆலோசனை சேவைகள் மற்றும் அளவுகள் தொடர்பாகத் தோன்றும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனை வழங்குவதைப் பரப்புதல் என்பவை சம்பந்தமாக பயிற்சிகளைப் பரப்புதல்.